திண்டுக்கல்லில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் புயலால் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
அதை கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களும் அமைச்சர் சீனிவாசனுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது அப்படி இருந்தும் கூட அமைச்சர் சீனிவாசன் கொடைக்கனல் அருகே உள்ள தாண்டிக்குடிக்கு சென்று அப்பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மலையக்காடு உள்பட சில பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அதன் பின் பேசியவனத்துறை அமைச்சர் சீனிவாசனோ....
கஜா புயல் தாக்கிய மறுநாளே நானும் துணை முதல்வரும் கொடைக்கானல் வந்தோம் அப்பொழுது போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் எங்களிடம் கொடைக்கானலில் அவ்வளவுக்காக பாதிப்பு இல்லை என தகவல் சொன்னார். அதனால்தான் நானும், துணை முதல்வரும் பாதியில் திரும்பி விட்டோம். அதன்பின் நாகப்பட்டினம் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவிட்டு உடனே வந்து விட்டேன். இந்த மலைப்பகுதியில் பாதிக்கப்பட்டோர். சேதமடைந்த பயிர்கள் சாய்ந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 168 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலை பகுதியில் 14 கிராமங்களைத் தவிர மற்ற கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள கிராமங்களுக்கு கிராமங்களுக்கு இன்று மாலைக்குள் மின் விநியோகம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் அடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஜெனரேட்டர் வசதியுடன் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 250 கோடி நிவாரண தொகை வேண்டும் என மத்திய குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
அப்போழுது மாவட்ட கலெக்டர் வினை.எம்.பி.உதயகுமார் உள்பட சில அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் சிலர் உடன் இருந்தனர்.