
ஆளும் கட்சிக்கு எதிராக கமல்ஹாசன் புதிய கட்சியை உருவாக்குகிறார் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
சராசரியாகவே கமல்ஹாசனை பற்றி உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். ஒரு திரைப்படத்தையே மிகவும் சிரமப்பட்டு எடுக்கக்கூடியவர். இவ்வளவு பெரிய இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு நிறைய உழைப்பார் என்று நம்புகிறேன்.
அதையும் கடந்து, இது ஆளும் கட்சிக்கு எதிராக என்பது மட்டுமல்ல. ஒரு மாற்றம் வேண்டும் என அவர் நினைக்கிறார். இது முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கு எதிராக தான் அவர் ஒரு கட்சியை உருவாக்குகிறார் என்று சொன்னால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.