Skip to main content

தொடர்ந்து போராடுகிறார் கலைஞர்...! -ஈரோட்டில் கலைஞர் சிலைதிறப்பு விழாவில்  மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருனாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசும் போது,

தலைவர் கலைஞர் மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து தமிழகம் முழுக்க தலைவர் கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டங்கள் கலைஞர் சிலை திறப்பு விழா என நடந்து வருகிறது. கலைஞர் பிறந்ததிலிருந்து தொடர்ந்து போராட்டத்தையே  சந்தித்து வந்தார் அவர்மறைவுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையோரம் பேரறிஞர் அண்ணாவின் அருகே துயில் கொள்ள விரும்பினார். தலைவர் இறந்த பிறகு  அங்கு இடமில்லை என இந்த அரசு கூறிய போதிலும் நீதிமன்றத்திலே போராடி அந்த இடத்தை பெற்றோம். இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம் என அவரது போராட்ட பாதை தொடர்ந்தது.  இந்த ஈரோட்டில் கூட பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் தலைவர் கலைஞர் சிலையை அமைக்க மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


ஏற்கனவே தலைவர் கலைஞர் இறந்த பிறகு அவருக்கு முதலாவது சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைத்தோம். இரண்டாவது சிலை கலைஞரின் குருகுலமான ஈரோட்டில் அமைக்க முடிவு செய்தது இந்த பன்னீர்செல்வம் பூங்காவில் அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை ஆகவே ஈரோட்டில்  திமுகவிற்கு சொந்தமான ஒரு இடத்தில் தலைவர் கலைஞரின் சிலையை சென்ற வருடம் இதே ஈரோட்டில் நான் திறந்து வைத்தேன். ஆனாலும் இந்த பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் பேரறிஞர், அண்ணா ஆகியோரின் சிலைக்கு அருகே கலைஞரின் சிலை அமைய வேண்டுமென ஒட்டுமொத்த திமுகவினரின் விருப்பமாக இருந்தது.

இந்தநிலையில் இந்த அரசு இங்கு சிலை வைக்க அனுமதி கொடுக்கவில்லை இருப்பினும் மீண்டும் நீதிமன்றத்தை நாடி போராடியபோது இந்த அரசு இப்போது அனுமதி கொடுத்தது. ஆக கலைஞர் இறந்த பிறகும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார். அவரது லட்சியங்கள் அவரது கொள்கைகளை திமுக என்றென்றும் முன்னெடுத்துச் செல்லும் தமிழ்மக்களுக்காக என்றென்றும் பாடுபடும் " என்றார் முக ஸ்டாலின்.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


கலைஞருடைய வாழ்க்கையே போராட்டம்தான். அவர் மாணவர் பருவத்தில் இருந்த பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் சேரவேண்டும் என்பதற்காக சென்ற பொழுது அந்த பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ சீர்திருத்தவாதி, சுயமரியாதைக்காரன். இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற  குழந்தைகளை எல்லாம் நீ கெடுத்துவிடுவாய். சீர்திருத்தக் கொள்கைகளை, சுயமரியாதைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி இங்கு இருக்கின்ற மாணவர்களைக் கெடுத்து விடுவாய். உனக்கு இடம் கிடையாது என்ற திருவாரூரில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் கூறினர்.

 

 The kalaingar who constantly struggles ... MK Stalin talks about opening the statue in Erode


அந்தப் பள்ளிக்கூடத்திற்கு நேரெதிரே இருக்கக்கூடிய கமலாலயம் குளத்திற்கு மேல் வந்து நின்று கொண்டு இந்த பள்ளியில் சேர்க்கவில்லை என்று சொன்னால் இந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன், இறந்துவிடுவேன் என கலைஞர் ஒரு போராட்டத்தை நடத்தினார். அதன் பிறகு பள்ளி நிர்வாகம் கலைஞரின் போராட்டத்தை பார்த்து அஞ்சி நடுங்கி அந்த காரியத்தை மட்டும் செய்து விடாதே உன்னை உடனே பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்கிறோம் என பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடத்தில் சேருவதற்குகூட போராட்டத்தை நடத்தியவர் நமது கலைஞர் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்