Skip to main content

’மொட்ட தலைக்கு சிகை அலங்காரம் செய்யும் வேலையை ரஜினி செய்து வருகிறார்’- கே. பாலகிருஷ்ணன் பேச்சு

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

 

சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

k

 

பின்னர் அவர் சுதந்திரதின உரையாற்றுகையில் 73 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் இரண்டாவதாக சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

 

 மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் பங்கு சந்தை வீழ்ச்சி, அடைந்து தொழில்கள் முடங்கி போயுள்ளது, இதனால் வேலையின்மை, வறுமை, நாட்டை ஆட்டிப் படைத்து சாதிக் கொடுமைகளும், அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

 

k

 

மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தீவிரவாத தடுப்பு மசோதா நிறைவேற்றம் போன்றவற்றை செய்துள்ளார். காஷ்மீரில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துவிட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என மத்திய அரசு கூறுவது அபத்தமான ஒன்று.  மத்திய அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மிரட்டுகின்றனர், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்களை, பாஜக விலைக்கு வாங்கி தங்கள் கட்சியான பாஜகவை பலப்படுத்தி கொள்வதாகவும்  குற்றம்சாட்டினார்.

 

மத்தியில் ஆளும் பாஜக அரசு எதை செய்தாலும் அதற்கு தலையாட்டும் பொம்மை அரசாக தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஜால்ரா போட்டு  துதி பாடி வருகிறார். அவர் மொட்டைத் தலையில் சிகை அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். இது நிலைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்தி வரதரை நள்ளிரவில் ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு ஆகம விதியெல்லாம் கணக்கு இல்லை என்றார்.

சார்ந்த செய்திகள்