Skip to main content

லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

The judge sentenced the bribed official to prison!

 

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர், கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு மானியத்தின் உதவியோடு புதிய ஆட்டோ வாங்குவதற்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் வங்கிக் கடன் பெற்றுள்ளார். தான் வாங்கிய ஆட்டோ கடனுக்கு ரூ.25,000 மானியம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், மணிகண்டனுக்கு மானிய தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவதற்காக மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக தாட்கோ அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பாலு என்பவர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி அம்பிகாபதியிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கையும் களவுமாக கைது செய்தனர். 

 

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் விசாரித்துவந்தார். இதில் தற்போது விசாரணைகள் முடிந்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில், கார்த்திகேயனுக்கு ஐந்து வருடச் சிறைத் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதன்பின் இளநிலை உதவியாளர் பாலு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்