Published on 04/08/2019 | Edited on 04/08/2019
சென்னை தீவு திடலில், பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.

பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் நடுத்தர வயது பெண்கள் என மொத்தம் 5,800 பேர் கலந்து கொண்டனர். பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான இதனை சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 3 கிலோமீட்டர், 5 மற்றும் 10 கிலோமீட்டர்கள் என வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடந்தது.