ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சரான கே.வி. ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரதீப் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தமிழ் இந்து நிருபர் கோவிந்தராஜ், ஜூனியர் விகடன் நிருபர் நவீன் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றனர்.
இந்த வழக்கு முறைப்படி புகார் பதிவுசெய்யப்பட்டு கே.வி. ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரதீப் மீது இன்று கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் செய்தியாளர் தாக்கிய எம்.எல்.ஏ. மகன் உட்பட அதிமுகவை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மகன் உட்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நல சங்கத்தின் சார்பாக அதிமுக நிர்வாகிகள் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் நீதி வேண்டும் என்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விடுதலை சண்முகம் தலைமை வகித்தார்.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்க செயலாளர் திரு. ஜீவாதங்கவேல் ஒரு அரசு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை முன்னாள் அமைச்சர் மகன் என்று கடுமையாக தாக்கியது கண்டனத்துக்குரியது பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.
ஈரோட்டில் நடந்த சம்பவம் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. ஆகவே முன்னாள் அமைச்சர் மகன் மீதும் பத்திரிகையாளரை தாக்கிய அதிமுகவினர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கூறினார். அதேபோல் மாவட்டம் முழுவதும் முழுமையாக இருந்து வந்திருந்த பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.