Skip to main content

ஜெ. தங்கி இருந்த பங்களா வீட்டில் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன்!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 


தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில அரசியல் கட்சிகளும் சுயேச்சை கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

 

j

 

இந்த நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  சென்னையை சேர்ந்த வேட்பாளராக இருப்பதால் தேனியில் சொந்த வீடு இல்லை.  அதனால் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் சீனிவாசன் பங்களாவில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார் .


     இந்த தேனி என்.ஆர்.டி. நகரிலுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் சீனிவாசன் வீட்டில்தான் 1095.1996ம் ஆண்டு வருடத்தில் ஆண்டிபட்டியில்  போட்டி போடும் போதும்,  தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இங்கேயே  ஜெ. பல நாட்கள் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

 

 அந்த அளவுக்கு ஜெயலலிதா தங்கியிருந்த வீடு ராசியான வீடு.  அதோடு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.  அதன் மூலம் தேனியில் உள்ள என். ஆர் .டி . நகரில் இருக்கும் சிங்கப்பூர் வீடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம்  பிரபலமாகி விட்டது.

 

இந்த நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கி இருக்கிறார் .  ஆனால் இந்த பங்களா சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் சீனிவாசன்,  இளங்கோவனின் உறவினர் என்பதால் அந்த பங்களாவை பயன் படுத்தி வருகிறார்.  இதன் மூலம் இளங்கோவன் இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகி விட்டால் இந்த பங்களா வீட்டிலேயே குடி இருக்க போகிறார் என்ற பேச்சும் பரவலாக எதிர் ஒலித்து வருகிறது.
 

சார்ந்த செய்திகள்