தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்ளாக நகைகளை வைத்து கடன்பெற்றவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.பெரியசாமி, "நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நகைக்கடன் தள்ளுபடி பற்றி எதிர்க்கட்சி உண்மைக்கு மாறான தகவல்களை தருகிறது. கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் மூலம் ரூபாய் 48 லட்சம் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நகையே இல்லாமல் கூட நகைக்கடன் கொடுக்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.
தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் தரப்படும். அனைத்து நகைகளையும் 5 சவரனுக்கு கீழ் வைத்து மோசடி செய்துள்ளார். மோசடியாக கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி தர முடியும். ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் வாங்கியிருந்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். நன்கு ஆராய்ந்துதான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. 13.5 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.