வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீரசெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவர் தனது மகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் கடந்த அக்டோபர் 8ந் தேதி மாலை பள்ளிகொண்டா பேருந்து நிறுத்தத்தலிருத்து வேலூர் டூ ஓசூர் வரை சேல்லும் அரசு போருத்தில் பயணம் செய்யும் போது, அவரது பையில் வைத்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளைப்போயிருப்பதை கண்டு அதிர்ச்சியானார்.
இதுப்பற்றி அவர் ஆம்பூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். இந்த திருட்டு விவகாரத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவை சேர்ந்த ஒரு பெண்மணி, இவர் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்த ஒரு பெண்மணி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பெண்மணி பாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்துள்ளார். அந்த பெண்மணி மீது வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு திருட்டு புகார்கள் உள்ளன எனக்கூறப்படுகிறது. அவரை அதிகாரபூர்வமற்ற முறையில் ஆம்பூர் போலிஸார் அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே சில திருட்டு புகாரில் அந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் இவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.