ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தல்:
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டி சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி 20 மாணவர்களின் கன்னங்களில் அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.