நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டது தொடர்பான சம்பவத்தில் நடிகர் எஸ்.பி.சேகருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எஸ்.பி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தண்டனை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் எஸ்.பி.சேகர் மேல்முறையீடு செய்திருந்தார். சிறப்பு நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு வழங்கிய ஒரு மாத கால சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ததோடு சிறை தண்டனையை உறுதி செய்தார்.