Skip to main content

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 10,000-ஆக உயர்வு

Published on 25/01/2019 | Edited on 25/01/2019

 

ss

 

இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 7,500-ல் இருந்து ரூ. 10,000-ஆக உயர்த்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

 

கடந்த 22-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நேற்று அரசாணை வெளியிட்டது. அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 17B விதியின் கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த தற்காலிக ஆசிரியர்களை ரூ. 7,500 தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்