Published on 24/01/2019 | Edited on 24/01/2019

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 17B விதியின் கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக ஆசிரியர்களை ரூ. 7,500 தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.