Skip to main content

ஜெ., வழங்கிய நிதி குறைப்பு மாணவர்கள் பரிதவிப்பு

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
ஜெ., வழங்கிய நிதி குறைப்பு மாணவர்கள் பரிதவிப்பு

தமிழக அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை வருடம் தோறும் எழுபது ஆயிரம் வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 8வது மாதம் சுயநிதி கல்லூரியில் படிக்கும் ஆதித்திராவிட மாணவர்களுக்கான உதவி தொகை ரூ. 55 ஆயிரமாக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் சார்பில் மனு அளிக்க மாணவர்கள் திறாளாக குவிந்தனர். அப்போது இது குறித்து குழுவினர் கூறுகையில்,

சுயநிதிக்கல்லூரியில் அரசுநியமித்த கட்டண குழு நிர்ணயத்த உதவி தொகை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வருடம் தோறும் உயர்த்தி வழங்கிட அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் அமைச்சரவை ஒப்புதல் இல்லமால் ஆதித்திரவிட நலத்துறை 11.08.17 ம்தேதி அரசாணை 51, 52ல் நிதி குறைக்கப்படுவதாக தெரிவித்து வெளியிட்டுள்ளது.

இதனால் ஒரு லட்ச மாணவர்கள் கல்வி உதவி கொகை கிடைக்காமல் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக நிறுத்தப்பட்ட உதவிதொகையை வழங்க ஆவண செய்ய வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த மாணவர் கல்வி திட்டம் முடங்க கூடாது என வலியுறுத்தப்பட்டு உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

- அருள்குமார்

சார்ந்த செய்திகள்