Published on 10/04/2019 | Edited on 10/04/2019
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் குடியாத்தம் செல்லும் சாலையோரம் பேருந்து நிறுத்தம் அருகில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான கவி சூப்பர் மார்க்கெட் உள்ளது. அதன் அருகே அவருகு சொந்தமான மருந்தகமும் உள்ளது.
அவை இரண்டிலும் ஏப்ரல் 9-ம் தேதி மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த ரெய்டு எனச்சொல்லப்படுகிறது. 15 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் தற்போது அந்த சூப்பர் மார்க்கெட், மருந்தகத்தில் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
உண்மையில் அங்கு ஒரு வேட்பாளருக்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் போனதாலே வருமான வரித்துறை ரெய்டு செய்வதாக கூறப்படுகிறது. அந்த வேட்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.