நிதி நிலைமை சீரான பின்னரே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வாய்ப்பு இருக்குமென தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய (23.06.2021) கூட்டத்தில் ''தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போதுதான் பெட்ரோல் டீசல் விலை குறையும். மத்திய அரசு பல மடங்கு வரியை உயர்த்தியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதற்கு காரணம். கச்சா எண்ணெய் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. எனவே நிதிநிலைமை சீரான பின்னரே பெட்ரோல் விலை குறைக்கப்படும். அரசின் நிதிநிலைமை சரியான பிறகுதான் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடியும். வாக்குறுதிகளை ஒரே நாளில் ஒரே மாதத்தில் நிறைவேற்றுவோம் என சொல்லவில்லை'' என நிதியமைச்சர் பழனிவேல் என தெரிவித்துள்ளார்.