Published on 08/03/2018 | Edited on 08/03/2018

உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கவுதமி அஞ்சலி செலுத்தினார். மேலும் உலக மகளிர் தினம் குறித்த சிறப்பு வீடியோ ஒன்றையும் கவதமி வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நடிகை கவுதமி, ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் இடம் உள்ளது உண்மைதான். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை கமல், ரஜினி நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை என்றார்.
மேலும், பேசிய அவர், திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.