தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான இன்றைய விவாதத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "விழுப்புரம் மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 பேருக்கு ரூபாய் 4 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும். ஒடுக்கப்படும் சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே திராவிடக் கொள்கை. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல. நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆணிவேராக உள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 338 கோடியில் உயர் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். மருத்துவமனையில் கார்டியோ வேஸ்குலர் இமேஜிங் தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.