குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வங்கியில் வைத்திருந்த தங்களின் இருப்பு தொகையை எடுக்க புறப்பட்டு வந்ததால் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் இந்தியாவை பெரும் போராட்டகளமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்,மாணவர்களும் சட்டத்திற்கு எதிராக போராட்டக் களத்தில் குதித்து போராடி வருகின்றனர். அமைதிப்பேரணி, ஆர்பாட்டம், தெருமுனைப்போராட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு போராட்ட வரிசையில் தற்போது ஒவ்வொரு பகுதியிலும் இரவு பகல் என தொடர் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரிழந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள், அந்த வங்கியில் அதிக இருப்பு வைத்திருப்பவர்களும் இஸ்லாமியர்கள் தான். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அது சட்டத்திற்கு எதிராக தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க அவர்கள் அனைவரும் அமைதியான முறையில் திரண்டுவந்து எடுத்தனர். இந்த செய்தியை அறிந்துகொண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளிவாசலுக்கே சென்று அங்குள்ள ஜமாத்தார்களை சந்தித்து நாங்கள் என்ன செய்யமுடியும், உங்கள் செயலால் எங்களது வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல் பேசி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் அடுத்தடுத்த போராட்டம் வெடிப்பதால் தமிழகமே அமைதியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுவருகிறது.