Published on 02/12/2022 | Edited on 02/12/2022

2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் என தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரும் ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரை பலூன் திருவிழா கொண்டாடப்பட இருப்பதாகவும், இவ்விழாவில் அமெரிக்கா, மெக்சிகோ, ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 10 பலூன்கள் பறக்கவிட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் பலூன்கள் பறக்க விடப்படும் எனவும், இத்திருவிழாவில் சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழக சுற்றுலாத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.