Published on 09/09/2021 | Edited on 09/09/2021
ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மைசூரிலிருந்து வரும் லாரிகளை காட்டுயானைகள் உணவுக்காக வழிமறிப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். குறிப்பாகக் கரும்பு ஏற்றிச்செல்லும் லாரிகளை யானைகள் சூழ்ந்து கரும்புகளைச் சாப்பிடுவது வழக்கமான ஒன்றே. ஆனால் இந்த சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் தற்பொழுது பட்டப்பகலிலேயே கரும்பு லாரிகளை யானைகள் சூழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள். இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்று ஈரோடு சத்தியமங்கலம் பகுதி காரப்பள்ளம் சோதனை சாவடியில் இரண்டு காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையில் சிதறிய கரும்புத் துண்டுகளைச் சாப்பிட்டதோடு, அந்த வழியே வரும் லாரிகளை இடைமறித்துச் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்குப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.