கோவை, சரவணம்பட்டி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் - மஹிஷா ஆகியோரின் மகன் உதிரன். ஒரு வயது, பதினோரு மாதங்களே ஆன இந்தச் சிறுவன் தமிழ் அகராதி, மாதங்களின் பெயர்கள், வண்ணங்கள், விலங்குகள், பறவைகள் என சுமார் 288 சொற்கள் மற்றும் படங்களின் பெயர்களைத் தனது மழலைச் சொற்களால் கூறி அசத்துகிறான். சிறுவன் உதிரனின் இந்தச் சாதனை நோபல் புக் ஆஃப் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்த சாதனை புரிந்த சிறுவன் உதிரனுக்கு நோபல் புக் ஆஃப் ரெக்கார்டு தீர்ப்பாளர் சிவமுருகன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதுகுறித்து சிறுவனின் தாயார் மஹிஷா கூறுகையில், சிறு குழந்தையாக இருக்கும்போது நண்பர் ஒருவர் பரிசளித்த சிறு புத்தகத்தை உதிரன் படிக்கத் துவங்கியதை தாம் கவனித்ததாக குறிப்பிட்டார். இதுபோல பொருட்களின் பெயர்களைக் கூறுவதால், வீட்டிலேயே பிரத்யேக பயிற்சி அளித்ததால் இந்தச் சாதனையை செய்ய முடிந்ததாக தெரிவித்தார்.