Skip to main content

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலிடம் விசாரணை!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். 
 

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகிறது. 

INDIAN 2 FILM SHOOTING INCIDENT ACTOR KAMAL HASSAN GOING TO CBCID OFFICE

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று (03/03/2020) ஆஜராகும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் பேரில் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் கமல்ஹாசன் நேரில் ஆஜரானார். அவரிடம்  மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்து தொடர்பாக ஏற்கனவே இயக்குனர் ஷங்கரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்