கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 19 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்டாவில் பருவம் தவிர்த்து பெய்த மழையால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசின் மத்திய குழு ஆய்வு செய்ததற்கு பின்பாக 19 சதவீதத்திலிருந்த நெல் கொள்முதல் ஈரப்பதம் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ளது.
நெல் கொள்முதல் செய்யப்படும் நேரங்களில் மழை பெய்யும் பொழுது விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என முன்பே கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 19 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.