Skip to main content

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
stalin


வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் தீர்ப்புக்கு எதிராக, அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,

சமூகநீதிக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காகவும், அரசியல் சட்டத்தின் நோக்கத்தை பட்டுப்போகாமல் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டக்களமாக இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பிஜேபி ஆட்சி மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. தற்போது, உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற போராட்டங்களை எல்லாம் பார்த்த பிறகு, வேறு வழியின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முன் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கொடுமையாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது 9 வது அட்டவணையில் இதனை சேர்த்து, ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இந்தப் போராட்டம் இன்றோடு முடியாமல், மேலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்