Skip to main content

விருத்தாசலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
incident in viruthachalam

 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பொன்னேரி ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள மினி டேங்க் பழுதாகி விட்டதால், கடந்த ஆறு மாத காலமாக குடிநீருக்காக அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

incident in viruthachalam


இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாக அதிகாரியின் அலட்சிய போக்கை கண்டித்து, விருத்தாசலம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்