Skip to main content

விருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி 4 பவுன் நகை, 50 ஆயிரம் கொள்ளை!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
INCIDENT IN VIRUTHACHALAM

 

கடலூர், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் இளவரசன். இவர் கருவேப்பிலங்குறிச்சியில் வட்டிக் கடை வைத்துள்ளார். இளவரசன் நேற்று இரவு வட்டிக் கடையை பூட்டிவிட்டு,  ஒரு பேக்கில் 4 பவுன் நகை, ஐம்பதாயிரம் பணம் மற்றும் லாக்கர் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இளவரசனும், அவரது மனைவி வீரலக்ஷ்மியும் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் அவரது வீட்டு பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பையில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

அப்போது விழித்துக் கொண்ட இளவரசன் அவர்களை பிடிக்க முயன்றபோது, மர்ம நபர்கள் இளவரசனை சரமாரியாக தாக்கிவிட்டு, வீரலக்ஷ்மியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளனர். அதற்குள் வீரலட்சுமி சத்தம் எழுப்பியதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளவரசனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

INCIDENT IN VIRUTHACHALAM

 

இதுகுறித்து அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வட்டி கடையை பூட்டிவிட்டு வந்த இளவரசனை பின்தொடர்ந்து வந்து லாக்கர் சாவியை திருடுவதற்காக கொள்ளையர்கள் வந்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் விநாயகமுருகன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர். நள்ளிரவில் வட்டி கடை உரிமையாளரை தாக்கி 4 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்