Skip to main content

இருசக்கர வாகனத்திற்கு தவணை தொகை கட்டாததால் மிரட்டல்.. -இளைஞர் தற்கொலை!

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

incident in vilupuram

 

விழுப்புரத்தில் 22 வயது இளைஞர் இருசக்கர வாகனத்திற்கு தவணை தொகை கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வானக்காரகுப்புசாமி தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ரவிக்குமார். தனது குடும்பத்துடன் வசித்துவந்த ரவிக்குமார் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அண்மையில் தனியார் நிதி நிறுவனத்தின் உதவியுடன் தவணை தொகையில் ரவிக்குமார் இருசக்கர வாகனம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதமாக தவணை தொகை கட்டப்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் ஊழியர் மேகநாதன் ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்று தகாத முறையில் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த ரவிக்குமார் கடந்த  ஜூன் 25 ஆம் தேதி பூச்சு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவிக்குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகத் தனியார் நிதி நிறுவன ஊழியர் மேகநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்