Skip to main content

பட்டப்பகலில் வீடுபுக முயன்றவனுக்கு தர்மஅடி! 

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் அப்துல் வாஜித் என்வர் வீடு உள்ளது. அக்டோபர் 7 ந்தேதி காலை 11 மணியளவில் வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே பட்டபகலில் வீட்டிற்குள் இரண்டு பேர் சுவர் ஏறி வீட்டுக்குள் குதித்துள்ளனர்.

 

incident in vellore

 

வீட்டுக்குள் சென்று திருட முயன்றவனை அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்துவிட்டு குரல் எழுப்பி அனைவரும் திரண்டு இருவரை பிடிக்க முயன்றபோது ஒருவன் தப்பி ஓடியுள்ளான், மற்றொருவன் சிக்கியுள்ளான். சிக்கியவனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர் பொதுமக்கள்.

 

ii



தான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன் என பதிலளித்துள்ளான். இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல்தர வாணியம்பாடி நகர போலீசார் நேரடியாக வந்து விசாரிக்க அவர்களிடம் திருட முயன்றவனை ஒப்படைத்தனர். தப்பியோடிய  மற்றொருவன் யார் என நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருவனை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்