Skip to main content

கரோனா பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் நெஞ்சுவலியால் மரணம்!!!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ளது களம்பூர். இந்த பேரூராட்சியின் காவல்நிலைய தலைமை காவலராக இருந்தவர் குப்பன். 52 வயதான இவர் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவை முன்னிட்டு களம்பூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

incident in thiruvannamalai


ஏப்ரல் 3ந்தேதி விடியற்காலை பாதுகாப்பு பணியில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சக காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து பரிசோதித்தபோது, அவர் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இந்த தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தெரியப்படுத்த அவர் அதிர்ச்சியாகியுள்ளார். இதுப்பற்றி மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகதுறையினர் என ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இறந்தது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காலை முதல் மாலை வரை பாதுகாப்பு பணியில் நின்றுக்கொண்டு, காரணமே இல்லாமல் வெளியே வருபவர்களை எச்சரித்து, அவர்களை திரும்ப வீட்டுக்கு அனுப்புவதே பெரும் மன உளைச்சளாக இருக்கிறது என்றனர் பல காவலர்கள். மேலும், வெளியே வராதீர்கள் என ஒருமுறை சொல்லலாம், இரண்டு முறை சொல்லலாம், வேண்டும்மென்றே வருபவர்களை எப்படி அடக்குவது. யாரையும் மிரட்டாதிங்க, அடிக்காதிங்க, தோப்புக்கரணம் போடச்சொல்லாதிங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிட்டாங்க.

பைக் எடுத்துக்கிட்டு சர்ரன்னு வர்றவங்களை நிறுத்தி வெளியே வராதிங்க, நோய் பரவுதுன்னு சொன்னா யார் கேட்கறாங்க. இதுவே பெரிய மனஉளைச்சலா இருக்கு. அந்த மனஉளைச்சலில்தான் அவர் நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டார் என்கிறார்கள்.

பணியில் இருக்கும்போதே இறந்த தலைமை காவலர்களுக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதையும், அவரது குடும்பத்துக்கு அரசின் சிறப்பு நிதி வழங்கவும் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியால் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் காவல்துறை தரப்பில்.



 

சார்ந்த செய்திகள்