Published on 25/06/2021 | Edited on 25/06/2021

கணவன் கரோனாவால் உயிரிழந்த நிலையில் மகன், மகளுக்குப் பூச்சி மருந்து கொடுத்து கொலைசெய்த தாய், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. இவரது கணவர் பாஸ்கர், கரோனா பாதிப்பால் சில நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில், குடும்பமே வறுமையிலும் குடும்பத்தலைவரை இழந்த சோகத்தில் இருந்து மீளாத நிலையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் திவ்யா, அவரது 11 வயது மகளுக்கும், 6 வயது மகனுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் ஈரோடு, திண்டல் லட்சுமி கார்டன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.