Skip to main content

தற்கொலையில் முடிந்த முறையற்ற தொடர்பு!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Improper contact incident

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது கொசப்பாடி. இந்த ஊர் அருகே காட்டுக்கொட்டாய் இப்பகுதியில் வசித்து வந்தவர் 45 வயது ரமேஷ். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சிலமாதங்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி வாகன ஓட்டுநராக பணி செய்து வந்துள்ளார். இவருக்கும் அவரது ஊரை சேர்ந்த 28 வயது ரஞ்சிதா என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. ரஞ்சிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு அவரவர் குடும்பத்திற்கு தெரியாமல் சின்னசேலம் எம்ஜிஆர் சிலை பின்புறம் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கி இருந்துள்ளனர். இருவரும் தங்கள் குடும்பத்தினரை, பிள்ளைகளை விட்டு பிரிந்து தனித்து வந்து குடும்பம் நடத்துவதை அறிந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை கருதி இருவரும் பிரிந்து சென்று அவரவர் குடும்பத்தோடு இணையுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

 

நேற்று மதியம் ரமேஷ் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து தான் சின்னசேலத்தில் தங்கி இருப்பதாகவும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் உறவினர்கள் சின்னசேலம் வந்து அவர் குடியிருந்த வீட்டை பார்த்துள்ளனர். அப்போது அந்த வீடு சாத்தியிருந்தது. திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷும் ரஞ்சிதாவும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பொறுப்பு புவனேஸ்வரியை சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று இறந்து கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்