இளையராஜாவின் வீர மரணச் செய்திகேட்டு
அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தி:
’’ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், கண்டனி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற வீரர் மரணம் அடைந்தார் என்கிற செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்தியாவின் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்போகும் இத்தருணத்தில், நம்நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
வீரர் இளையராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வீரமரணமடைந்த வீரர் இளையராஜா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’’