தமிழிசை நீட் தேர்வில் 50% மதிப்பெண் பெற்றால் நீட் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: வேல்முருகன்
சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழக வாழ்வுரிமை கட்சி நீட் தேர்வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது. அதே போல் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முன்னின்று போராட்டத்தை நடத்துகிறது. நீட் தேர்வு எந்த ஏழை வீட்டு பிள்ளையும் மருத்துவர் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனை இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மோடியின் காலில் விழுந்து தமிழகத்தில் அமுல்படுத்தியுள்ளனர். இதனால் 1176 மதிபெண் எடுத்த அனிதாவை கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் கிருஷ்ணசாமியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் தற்போது நீட் எழுதுங்கள் 50 சதவீதமான மார்க் எடுத்தாலே நாங்க நீட்டுக்கு எதிராக போராடமாட்டோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான கல்வியை அமுல்படுத்த வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அரசின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பேசினார்.
- காளிதாஸ்