Skip to main content

“மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதை ஒடுக்க வேண்டும்” - ஜெயக்குமார்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

"If there is a riot in the name of religion, it should be suppressed" - Jayakumar

 

 

மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதன் ஆரம்ப காலத்திலேயே அதை ஒடுக்கி தமிழ்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் கே.சி.பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க  வேப்பேரி காவல் ஆணையரகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளித்தார். அதன் பின் செய்தியளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “ஜாதி மத இன மோதல் இல்லாத அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. மதக்கலவரங்கள் வராமல் காப்பாற்றுவது அரசின் கடமை. எந்த மதமாக இருந்தாலும் இங்கு அந்த மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதன் ஆரம்பக் காலத்திலேயே அதை ஒடுக்கி தமிழ்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்தி தர வேண்டும். 

 

ஆர்எஸ்எஸ் பேரணியை 2017ம் ஆண்டு நடத்த அதிமுக அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுத்துக்கொள்ளுதல் என்பது வேறு. மாவட்டம் முழுவதும் நடப்பது என்பது வேறு. அப்படிப் பார்த்தால் ஏகப்பட்ட இடங்களில் இன்று நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது.  

 

இந்த விசயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகின்றது. அதிமுகவை பொறுத்த வரை எந்த பேரணி விசயங்கள் நடந்தாலும் பொது மக்களுக்கு அமைதி ஏற்படுத்தி தரவேண்டும். அந்த அமைதியை நிலைநாட்டிக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்