ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வாராக்கடனை வசூலிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத் துறை வங்கியான ஐ டி பி ஐ வங்கியில் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாத 6௦ கோடி ரூபாய்க்கும் மேலாக வாராக்கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கடன்களை வசூலிக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து வங்கியில் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இதனால் முறையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியாததால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , வாராக்கடனை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ டி பி ஐ வங்கி ஊழியர்கள் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள , ஐ டி பி ஐ வங்கியின் முன்பு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன.
அருள்