வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை தரமறுக்கும் IClCI Lombard (ஐசிஐசிஐ லொம்பார்டு) நிறுவனத்தைக் கண்டித்தும் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் நுங்கம்பாக்கத்தில், உத்தமர் காந்தி சாலையில் இந்தியன் ஆயில் பவன் அருகே உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் 20.02.2018 நேற்று காலை முதல் தற்போது வரையிலும் 24 மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை முழுவதும் வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்ற வகையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு 21.02.2018 இன்று காலை 11 மணி முதல் அரசியல்கட்சிகள், விவசாயசங்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், இளையோர் இயக்கங்கள் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில சென்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
படங்கள்: அசோக்குமார்