Skip to main content

என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்: விஜயபாஸ்கர்

Published on 04/08/2017 | Edited on 04/08/2017

என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு
 முற்றுப்புள்ளி வைப்பேன்: விஜயபாஸ்கர்

சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் குவாரிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்த பின்னர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் பேசியபோது,  ‘’பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு தான். வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’’என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்