Skip to main content

'அப்போவே சொன்னேன்... சொல்லியும் கேட்காமல் போய் மாட்டிக்கொண்டார்'-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
 'I told him then...he got stuck without even listening'-Selvaperundhagai interviewed

காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. பின்னர் கட்சியில் தனக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த விஜயதாரணி தொடர்ந்து தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் அங்கு மீண்டும் வெற்றி பெற்றது.

அண்மையில் பாஜக கூட்டம் ஒன்றில் மேடையில் விஜயதாரணி பேசுகையில், ''சில விஷயங்கள் என்னைக் கவர்ந்தால் மட்டுமே அதில் ஈடுபடுவேன். நான் அந்த மாதிரி ஒரு கேரக்டர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. இருப்பதையும் விட்டுவிட்டு பாஜகவில் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லாம் வரல. எதிர்பார்ப்போடு தான் வந்தேன். எல்லோரும் நான் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தேன் என நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அது தப்பு. நல்லா உழைக்கவேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டுபோக வேண்டும் என்று எதிர்பார்ப்போடு வந்திருக்கிறேன். அதற்கு என்ன தேவை? ஏதாவது ஒரு பதவி தேவை. ஆறு மாசம் ஆகிவிட்டது. பிரச்சனையில்லை நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எல்லோரும் பேசி எனக்கு நல்லது செய்வீங்க. ஆனால் அதேநேரம் நிச்சயமாக என்னைப்  போன்றவர்களின் பணியை பாஜக நிச்சயமாக பயன்படுத்தும். அதில் இரு வேறு கருத்து இல்லை. எனக்கு நன்றாக தெரியும். நான் எப்படி பேசுவேன் என்று எல்லோருக்கும் தெரியும். நியாயத்திற்கு மட்டும்தான் நிற்பேன்'' என்றார்.

nn

விஜயதாரணியின் பேச்சு பாஜகவில் பதவி கொடுக்காத அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இருந்ததாக பேசப்பட்டது. இந்நிலையில் விஜயதாரணி பேச்சு குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''உள்ளே இழுத்து கதவை சாத்தி விட்டார்கள். நான் அப்பவே சொன்னேன். அரை மணி நேரம் பேசினேன். நீங்க போற இடம் சரியான இடம் இல்லம்மா வேண்டாம். சட்டமன்ற உறுப்பினர் பதவியும் போகப்போகுது, அங்கு மரியாதை இருக்காது என்று சொன்னேன். இந்த தேசத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் வேண்டாம் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொல்லியும் கேட்காமல் போய் மாட்டிக் கொண்டார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்