Skip to main content

கலைஞரிடம் கடன் கேட்கிறேன் - என்ன கடன் என்றால்?.. கலைஞர் - 95ல் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா ‘கலைஞர் 95’ என்ற தலைப்பில் திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

அண்ணா மறைந்த பின்னர் இந்த கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கலைஞர்.

அந்த நேரத்தில் அண்ணாவின் இதயத்தை இரவலாக கவிதைபாடி கேட்டார். நான் கவிதை பாடி கேட்கவில்லை. கலைஞரிடம் கடன் கேட்கிறேன். என்ன கடன் என்றால், கலைஞர் அவர்களே. உங்கள் சக்தியின் பாதியை எங்களுக்கு கொடுங்கள்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய நாசகார ஆட்சியை, கொலைகார ஆட்சியை, ஊழல் மலிந்து இருக்கிற ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான போருக்கு நாங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறோம்.

அந்த போரில் வெற்றி பெற உங்கள் சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள். இந்த பாசிச அரசுகளை வீழ்த்தி, வெற்றியை இந்த மண்ணில் கொண்டாடுவோம். அதிலும் நீங்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்