இன்று (30.06.2021) காலை காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அறிஞர் அண்ணா இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்ட மு.க. ஸ்டாலின், அங்கு ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், ''தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளேன். கார் தயாரிப்பு மட்டுமின்றி சேவை மனப்பான்மையுடன் ஹூண்டாய் நிறுவனம் செயல்படுகிறது. கரோனா நிவாரணத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி தந்து உதவிய ஹூண்டாய் நிறுவனத்திற்கு நன்றி. 1996இல் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு அப்போதைய முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீபெரும்புதூரை உலக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றியதில் ஹூண்டாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது'' என்றார்.