தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களிடம் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் களமிறங்கியிருக்கிறார். அவர்களுக்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரி யசாமி ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்க ளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காள மக்களிடம் கேட்டு வருகிறார். இந்த நிலையில் 7வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சுபாஷுக்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அதுபோல் கட்சிக்காக உழைத்தவர் என்ற அடிப்படையில் அமைச்சர் ஐ.பி யும் சீட் கொடுத்தார் அதனடிப்படையில் தான் ஏழாவது வார்டில் போட்டி போடும் சுபாஷ்க்கு ஆதரவாக வாக்காள மக்களிடம் வாக்கு சேகரிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி சென்ற போது பெருந்திரளாக கூடியிருந்த மக்களை கண்டு அமைச்சரே பாராட்டினார் .
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது... முன்னாள் முதல்வரான தலைவர் கலைஞர் ஆட்சியின் போது நான் 2 முறை அமைச்சராக இருந்தபோது திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களுக்கு வீட்டு மனை பட்டா ஆயிரக்கணக்கில் கொடுத்திருக்கிறேன். வியாபாரிகளுக்கும் அவர்களுக்கும் ஒரு ரூபாய் கூட கூடுதலாக வீட்டு வரியை வரியை உயர்த்தவில்லை. ஆனால் அதன் பின் வந்த அதிமுக அரசு 100 சதவீத வரியை உயர்த்தியது. அதை எதிர்த்து நான் அப்போதே குரல் கொடுத்தேன். அதுபோல் நகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு சாலை வசதிகள் குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் தலைவர் ஆட்சியின் போதுதான் கொண்டு வந்து இருக்கிறோம்.
நான்ஆத்தூருக்கு மட்டும் அமைச்சர் இல்லை, திண்டுக்கல்லுக்கும் நான் தான் அமைச்சர். எதுவானாலும் என்னிடம் வந்து நீங்கள் சொல்லலாம். இந்த வார்டில் போட்டி போடும் திமுக வேட்பாளரான சுபாஷ் மக்களுக்காக உழைக்கக் கூடிய நல்ல பையன். எந்த நேரத்திலும் சுபாஷை சந்தித்து தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் சொல்லலாம். அதன்மூலம் நான் அதை உங்களுக்கு உடனடியாக நிறைவேற்றி கொடுப்பேன். அதனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சுபாஷ் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பல வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காள மக்களிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் நகர செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் பஷீர் உள்பட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.