தர்ஷிகா என்ற பெண்ணை அவளது கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, இலங்கைவாழ் தமிழ் பெண் தர்ஷிகா. இவருக்கு 27வயதாகிறது. இலங்கையில் இருந்த போது தனபாலசிங்கம் என்ற சசிகரன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இலங்கை தமிழ் பெண்ணான தர்ஷிகாவுக்கு 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். திருமணம் முடிந்தவுடன் வேலை காரணமாக கனடாவிற்கு சென்றுவிட்டார். இதனால் தர்ஷிகா இலங்கையிலேயே தனது பெற்றோருடன் இருந்துள்ளார்.
பின்னர் கணவருடன் சேர்ந்து இருப்பதற்காக தர்ஷிகாவும் கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் தர்ஷிகா நீதிமன்றத்துக்கு சென்று வழக்குப்போட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்ஷிகாவை, அவரது கணவர் சந்திக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பின்பு நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தர்ஷிகாவை சந்தித்துள்ளார் தனபாலசிங்கம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ஏற்பட தர்ஷிகாவை கத்தியை எடுத்து துரத்தி சென்று குத்தியுள்ளார். மனைவியை துரத்தி குத்திய சம்பவம் அங்கு இருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது பற்றி கனடா போலீஸார் விசாரித்த போது இந்த வழக்கில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதில், தனபாலசிங்கம் வைத்திருந்த பெட்டிக்குள் ஆணுறைகள், ஆபாசபடங்கள் இருந்ததாகவும் இதனால் தான் அவரது மனைவி சந்தேகம் அடைந்து கணவனிடம் இது பற்றி கேட்ட போது அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் விரிசல் அதிகரித்து தனபாலசிங்கம் வீட்டில் இருக்கும் சோபாவிலும் அவரது மனைவி படுக்கை அறையிலும் உறங்கியதாக சொல்லப்படுகிறது.
பின்பு ஒருநாள் திடீரென இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்துள்ளது. மற்றொரு நாள் காரில் செல்லும் பொழுது தனபாலசிங்கம் ஆத்திரத்தில் தனது மனைவியின் கையை முறுக்கி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தான் தனது மனைவியை கத்தி எடுத்து துரத்தி கொலை செய்துள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதையடுத்து சசிகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கருத்து கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது