சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதுகளில் என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கௌரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மாமியார் மீனாட்சி மற்றும் கணவனின் தம்பி குருமூர்த்தி ஆகியோர் புதுச்சத்திரம் மருத்துவமனைக்கு கௌரியை தூக்கி சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சனிக்கிழமை கணவன் மனைவியும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் குடும்ப பிரச்சனை சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் சண்டை முற்றியதால் விரக்தியில் கௌரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை வீடியோ காலில் கணவர் பார்த்தால் கணவரும் சிங்கப்பூரில் 'நீயே போன பிறகு எனக்கு இங்கு என்ன வேலை...' என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கௌரியின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் கணவன் சிங்கப்பூரிலும் மனைவி சொந்தஊரிலும் தூக்கிட்டு இறந்த சம்பவம் அத்தியாநல்லூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என தமிழக அரசு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் வேதனையானது.