சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், போலீசார், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டும் 9 பேரை காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்தை பார்த்து ஓடியதால் பள்ளம் ஒன்றில் விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்களை மீட்டு எடுத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 27 பேர், ஈரோடு மாவட்டத்தில் 12 பேர் என 39 பேர் வந்துள்ளனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் வந்துள்ளனர். கொலுக்கு மலையில் தங்கியுள்ளனர். குரங்கனில் இருந்து 15 கி.மீ. நடந்து சென்றனர். அங்கு தங்கிவிட்டு திரும்பி வந்தனர். அப்போது காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்து போலீசார், வனத்துறையினர், அப்பகுதி பொதுமக்கள் மூலம் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மதுரை, தேனி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.