Skip to main content

கடல் சீற்றத்தில் சிக்கிய மீனவர் மாயம்; தேடும் பணி தீவிரம்

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
The fisherman caught in a raging sea; Searching task intensity

தமிழக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. வானிலை மோசமாக இருந்த நிலையில் மீனவர்கள் பெரும்பாலும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அதேநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை வானிலை சற்று மாறுபட்டு நல்ல நிலையில் இருந்ததால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தியாகவல்லி பஞ்சாயத்து சித்திரைப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ஜானகிராமன் மகன் ஜெகன் (வயது 32) இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்களும் கடலுக்குள்  அதிகாலை பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

அப்பொழுது அவர்கள் சென்ற எதிர்பாராமல் படகு கவிழ்ந்து மூவரும் கடலுக்குள் விழுந்துள்ளனர். இதில் ஜெகன் என்பவர் மாயமானார் மற்ற இருவரும் அதே படகில் கரைக்கு வந்து விட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடலோர காவல்படை வீரர்களும் தீயணைப்புபடை வீரர்களும் காணாமல்போன ஜெகனை கண்டுபிடிக்க தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தேசிய மீனவர் கட்சியின் மாவட்ட தலைவர் செல்வ ஏழுமலை காணாமல் போன ஜெகனை தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமாகி போனதால் அந்த கிராமத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்