தாய்லாந்தைச் சேர்ந்த ஏழு பேர் தொழுகைக்காக ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் என்ற பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்கு கடந்த 11ஆம் தேதி வந்திருந்தனர் இதில் இருவர் 16ஆம் தேதி சொந்த நாட்டுக்குத் திரும்ப கோவை விமான நிலையம் சென்றபோது அதில் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்து கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அப்போது மற்றொருவரிடம் விசாரணை செய்ததில் மேலும் 5 பேர் ஈரோட்டில் உள்ளதாக அவர் தகவல் கூற, உடனே அரசு அதிகாரிகள் அந்த நபரோடு ஈரோடு வந்து அந்த 5 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர். இந்த ஆறு பேரில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோபி அருகே மயிலம்பாடியான் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து வந்திருந்த நபர்கள் தங்கியிருந்த ஈரோடு மசூதி பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் 168 பேர் அந்த தாய்லாந்து நபர்களோடு தொடர்பு இருந்ததால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள்.