Skip to main content

விடுதி மாணவ மாணவிகளுக்கு வாய்மொழி உத்தரவு

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ddd

 

 

தமிழகம் முழுவதும் 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விடுதிகளில் தங்கி பயிலக் கூடிய மாணவ மாணவிகளுக்கு ஒரு அறையில் மூன்று அல்லது நான்கு மாணவர்களும் மாணவிகளும் தங்கும் நிலை ஏற்படுவதால் ஒரு அறைக்கு ஒரே ஒரு மாணவர் அல்லது ஒரே ஒரு மாணவியோ மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. 

 

இந்த உத்தரவால் கல்லூரி நிர்வாகங்கள் மாணவ மாணவிகளிடம் இருந்து விடுதிக் கட்டணத்தை பெற முடியாமல் அதனால் மிகுந்த நஷ்டம் அடையும் நிலை ஏற்படும் என்பதால் விடுதியில் தங்காமல் தினம்தோறும் வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லக்கூடிய வெளிப்புற மாணவர்களை மட்டும் கல்லூரிகளுக்கு வர கல்லூரி நிர்வாகம் அனுமதித்துள்ளது.

 

மேலும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாய்மொழி உத்தரவாக நீங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று தமிழகத்தில் உள்ள கல்லூரி நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்