கரோனோ வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கையில் இந்தியாவில் தற்போது அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு சென்று உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இலட்சகணக்காண மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஊர்வலம் போல நடந்து டெல்லியை விட்டு சென்ற காட்சி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதை உணர்ந்த டெல்லி முதல்வர் உடனே யாரும் வெளியேற வேண்டாம், வீட்டு வாடகையை அரசு தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிகையாளர்களிடம் தமிழகத்தில இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க வீட்டு வாடகை பிரச்சனை கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழக மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் என யாரையும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக்கூடாது, மேலும் ஒரு மாத வாடகை கேட்கக்கூடாது. அவ்வாறு செய்வதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளர்.
மேலும் இது தொடர்பாக புகார்கள் தெரிவித்த விரும்பினால்
திருச்சி – 0431 -2333638,
கரூர் – 04324 – 255100
புதுக்கோட்டை – 04322 – 266966
அரியலூர் – 0439 – 222216
பெரம்பலூர் – 04328 – 224962
ஆகிய எண்களில் புகார் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.